“காங்கிரஸிடம் இருந்து விஜய் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- தமிழிசை

Estimated read time 0 min read

காங்கிரஸிடம் இருந்து முதலமைச்சர் விஜய் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார்.

சென்னையி சி.பா. ஆதித்தனாரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், “ஒரு சாக்லேட்டை வைத்து புரட்சி செய்ய முடியும் என்றால் அதை நம் பிரதமரால்தான் முடியும். தாய்மார்கள் பெண் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளருங்கள். கோவை சம்பவம் மனதை உலுக்கியது.

காங்கிரஸிடம் இந்த ஆட்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸிடம் இருந்து முதலமைச்சர் விஜய் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி, தவெக முதுகிலும் குத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் காங்கிரஸின் சரித்திரம் அப்படி. மின்தடைக்கு பல அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கலாம். திமுக தனது தவறை உணர வேண்டும்; காங்கிரஸ் தவறை திருத்திக் கொள்ளாது” என்றார்

You May Also Like

More From Author