தவெக அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன்….!! 

Estimated read time 1 min read

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

புதிய அரசு கடந்த 10, 11-ஆம் தேதிகளில் பதவியேற்றதில் இருந்து, கடந்த 20, 25 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 25 கற்பழிப்பு சம்பவங்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளதாக அதிர்ச்சி புள்ளிவிவரத்தை அவர் அடுக்கிக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், 10 வயது குழந்தையைக் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்திச் சின்னாபின்னமாக்கி, கொடூரமாகக் கொதறியிருக்கிறார்கள் என்றும், 60 வயது முதியவர், 80 வயது பெண் எனத் தொடர்ந்து அநீதிகள் நடந்து வருவதாகவும், இதையெல்லாம் முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் சாடியுள்ளார். முந்தைய திமுக ஆட்சிக்கும், இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சிக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

You May Also Like

More From Author