ஷாங்காயில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் உலக ஏஐ நிர்வாகம் பற்றிய உயர்நிலை கூட்டம் 8ஆம் நாள் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வு, 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், சுமார் 2036 கோடி யுவான் மதிப்புள்ள கொள்வனவு உடன்படிக்கைகள் எட்டப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 25 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஷாங்காய் மாநகரின் செயற்கை நுண்ணறிவு பற்றிய பல முக்கிய திட்டப்பணிகள் ஒருங்கிணைப்பாக கையொப்பமிட்டுள்ளன. இவற்றில், ஏஐ அடிப்படை வசதிகள், நுண்ணறிவுப் பொருட்கள் செயலிகள் முதலிய 32 திட்டப்பணிகளில் மொத்த முதலீட்டுத் தொகை 4090 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
