த.வெ.க.வின் முதல் அமைச்சரவைக் கூட்டம்!

Estimated read time 1 min read
பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

சுமார் ஒரு மணிநேரம் மேலாக கூட்டத்தொடர் நடைபெற்றது.

கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.கள் 35 பேர் கூட்டத் தொடரில் இடம்பெற்றனர்.

இந்தக் கூட்டத் தொடரில் தொழில் முதலீடு சார்ந்த திட்டங்கள் குறித்தும், லஞ்சம், போதைப் புழக்கம் இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பட்ஜெட், கவர்னர் உரை, மேகதாது, டாஸ்மாக், நிதி குறித்த வெள்ளை அறிக்கை, மகளிருக்கான ரூ.2500 குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்,

“விவசாயிகள் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு, இளைஞர்கள் மேம்பாடு, லஞ்சமற்ற தமிழகம் உள்ளிட்ட 436 திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முன்வைத்தார்” என தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமும் கூட.

னென்றால் தமிழ்நாட்டில் 1952-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 74 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது.

இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐ.எம்.யூ.எல் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்தக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
– வைஷ்ணவி பாலு

The post த.வெ.க.வின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! appeared first on Thaaii Magazine.

Please follow and like us:

You May Also Like

More From Author