“தாமரையில் இருந்து ஒரு இதழை கூட யாராலையும் அசைக்க முடியாது’’- தமிழிசை

Estimated read time 0 min read

அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை, ஆதரவும் இல்லை. அண்ணாமலை வந்ததால் பாஜக பலமும் அடையவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, “அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை, ஆதரவும் இல்லை. அண்ணாமலை வந்ததால் பாஜக பலமும் அடையவில்லை. சென்றதால் பலவீனமும் அடையவில்லை.

பாஜகவிற்கு மாற்று சக்தி தேட வேண்டிய அவசியமும் இல்லை. பாஜகவை நேசிக்கும் தொண்டர்கள் இங்குதான் உள்ளார்கள். உண்மை தொண்டர்கள் வெளியே செல்ல மாட்டார்கள். அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள். தாமரையில் இருந்து ஒரு இதழை கூட யாராலையும் அசைக்க முடியாது. இது ஆணவத்தின் உச்சம்…

ஏதோ கொஞ்சம் விசில் சத்தம் சத்தமா கேட்டுடுச்சினு இந்த பக்தர்களின் குரல் உங்களுக்கு கேட்காமல் இருக்கலாம், ஆனால் இந்த பக்தர்களின் குரல் விசில் சத்தத்தை விட வலிமையானது” என்றார்.

You May Also Like

More From Author