வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகள் தொடர் மழையால் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
தலைநகர் டெல்லியில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் குளம் போல் நீர் தேங்கியது. இதனால், பொதுமக்களும் வாகனஓட்டிகளும் கடும் அவதியடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நர்மதா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிபோய் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளும் கனமழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.