சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்துச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்த வெறுப்புணர்வுப் பதிவுகளை உடனடியாக முடக்குமாறு முகநூல், எக்ஸ் மற்றும் யூடியூப் தளங்களுக்குச் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனத் தகவல் தளங்களிலிருந்து திட்டமிட்டுப் பரப்பப்பட்ட இந்த அவதூறுப் பிரச்சாரங்கள், சிங்கப்பூரின் பல்கலாச்சாரக் கொள்கையையும் சமூக ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் இன நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் வெளிநாட்டுச் சக்திகளால் பரப்பப்படும் இத்தகைய இனவாதக் கருத்துக்களைத் தங்களின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று சிங்கப்பூர் உள்விவகார அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்தியர்கள் அதிகம் குடியேறுவதாக வதந்தி! சிங்கப்பூர் அரசு எடுத்த அதிரடி முடிவு!
