ரசிகர்களிடைய உற்சாகத்தைத் தூண்டும் விதமாக, நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கங்களின் பயோவைப் புதுப்பித்து, AK 64 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நுட்பமான உறுதிப்படுத்தல் அஜித்தின் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
தற்போது கார் பந்தயத்தில் அஜித் பிசியாக இருக்கும் நிலையில், AK 64 படத்தின் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் கடைசி படமான குட் பேட் அக்லியின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே இந்த படத்தையும் இயக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட்
