ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளில் “பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின் புரிந்துணர்வு” என்னும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பின் துவக்க விழா 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதே நாள் முதல் சீன ஊடகக் குழுமம் தயாரித்த இந்த நிகழ்ச்சி ரஷியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளில் ஒளிப்பரப்பப்படத் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் பண்பாட்டுச் சிந்தனை மற்றும் சீன நாட்டின் ஆளுமையில் வளமான பண்பாட்டு அடிப்படைகள் விவரிக்கப்படுகின்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியோங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் எல்மெக்பயேப், கிர்கிஸ்தான் தேசிய ஒலி மற்றும் ஒளிப்பரப்பு நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ச்சிலேபயேவ் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.