தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 28, 2025) வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு, துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை துணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் 70 இலிருந்து 78 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 15 அன்று நடைபெற்றது.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெறுகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது
