இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2025 சீசனிற்கு முந்தைய மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான தேர்த்திகள் தேதிகள் நவம்பர் 24 மற்றும் 25 ஆக இருக்கும் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த நிலையில், இந்த முறை ரியாத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடப்பது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக, ஐபிஎல் 2020க்கான ஏலம் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல்முறையாக வெளிநாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.