சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படம் நகைச்சுவை திகில் படமாக கொண்டு சந்தானம் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் 16 ம் தேதி திரைக்கு வருகிறது.
இதில் முக்கிய வேடங்களில் கீதிகா திவாரி, செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் ஆகியோரின் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்குனராக எடுத்த இந்த படத்தில் சீனிவாச கோவிந்தா என்று தொடங்கும் வகையில் ஒரு பாடலுக்கு சந்தானம் ஆடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் யூடியூப்பில் வெளியான நிலையில் தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள பல கோடி மக்கள் புனிதமாக கருதக்கூடிய பெருமாளின் பக்தி பாடலை சினிமாவுக்காக வேண்டுமென்று பக்தர்களின் மனம் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் படத்தில் பாடல் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், பாடலை நீக்கத் தவறினால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், இச்சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி கூறியுள்ளார்.