தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
74 வயதான ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து உள்ளதாக வலைப்பேச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதும், சுந்தர்.சி உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை தயாரிக்கவிருப்பது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்.
அதைத்தொடர்ந்து அவர் கமல் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போகிறார்.
அதுவே அவரின் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும், அதன் பின்னர் அவர் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்து விட்டார் என செய்தி வெளியாகி உள்ளது.
இந்த செய்தி ரசிகர்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி
