சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் அக்டோபர் 8ஆம் நாள் கூறுகையில், லாவோஸ் தலைமையமைச்சர் சோனெக்சே சிஃபாண்டோனின் அழைப்பை ஏற்று, லாவோஸில் நடைபெறவுள்ள 27வது சீன-ஆசியான் நாடுகளின்(10+1)தலைவர்கள் கூட்டம், ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின்(10+3)தலைவர்கள் கூட்டம், 19வது கிழக்காசிய உச்சிமாநாடு ஆகியவற்றில், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், அக்டோபர் 9 முதல் 12ஆம் நாள் வரை கலந்து கொண்டு, லாவோஸில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றார்.
மேலும், வியட்நாமின் தலைமையமைச்சர் பாம் மின் சினின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அக்டோபர் 12 முதல் 14ஆம் நாள் வரை வியட்நாமில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் தெரிவித்தார்.