அழைப்பை ஏற்று பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்ள பிரான்ஸுக்குச் சென்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் துணை அரசுத் தலைவருமன ஹான் செங் ஜுலை 26ஆம் நாள் பிற்பகல் பாரிஸில் உள்ள எலிஷே Élysée மாளிகையில் பிரான்ஸ் அரசுத் தலைவர் இமான்னுயேல் மாக்ரோனுடன் உரையாடினார.
ஹான் செங் கூறுகையில், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தலைசிறந்ததாக தங்கு தடையின்றி நடைபெற வாழ்த்தினார். இவ்வாண்டு மே திங்கள், பிரான்ஸில் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அரசு முறை பயணம் வெற்றி பெற்றது. சீன-பிரான்ஸ் நட்புறவின் சிறப்பு மற்றும் உயர் நிலையை இது வெளிப்படுத்தி, சீன-ஐரோப்பிய உறவின் சீரான வளர்ச்சிக்கும் உலகின் அமைதி மற்றும் நிதானத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மாக்ரோன் கூறுகையில், இவ்வாண்டு மே திங்கள், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் நட்பார்ந்த பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றும், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பிரான்ஸின் பயணம் வெற்றி பெற்றது என்றும் தெரிவித்தார்.
அன்றிரவு பாரிஸில் 33ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் ஹான் செங் கலந்து கொண்டார்.