சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலகப் பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவுக்கான 2ஆவது செய்தியாளர் கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் நாள் காலை நடைபெற்றது.
இதில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் மா ச்சௌட்சியூ கூறுகையில், அரசுத் தலைவர் மேற்கொள்ளும் தூதாண்மை நடவடிக்கை சீனத் தூதாண்மைப் பணிகளில் மிக உயர் நிலைப் பகுதியாகும். சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த தூதாண்மையில் தீர்மானகரமான பங்களிப்பை இது ஆற்றியுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது தேசிய மாநாடு வரை, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5 கண்டங்களிலும் 72 நாடுகளில் 55 பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்றார்.