மானசரோவர் யாத்திரை சென்ற 148 தமிழர்கள் நேபாளத்தில் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்  

Estimated read time 0 min read

மானசரோவர் ஆன்மீக யாத்திரைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 148 தமிழர்கள், கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாகா என்ற இடத்தில் சிக்கியுள்ளனர்.
அந்த ஆன்மீகக் குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி, தங்களது நிலை குறித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“நாங்கள் மானசரோவர் யாத்திரை செல்லும் வழியில் சாகா பகுதியில் பாதுகாப்பாக உள்ளோம். நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்துப் பாதைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. நாங்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு நேபாளம், சீனா மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்”.
“அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய ஒத்துழைப்பு வழங்கி, பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாகத் தாய்நாடு திரும்ப இறைவனைப் பிரார்த்தனை செய்கிறோம்” என்றார்.

You May Also Like

More From Author