இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 8 வது வாரமாக உயர்ந்து 729.33 பில்லியன் டாலர் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த 8 வாரங்களில் மட்டும் சுமார் 63 பில்லியன் டாலர்கள் கையிருப்பில் கூடுதலாக சேர்ந்துள்ளன.
ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மட்டும் கையிருப்பு 12.4 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
புதிய உச்சம்! இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு $729 பில்லியனாக உயர்ந்து வரலாற்று சாதனை
Estimated read time
0 min read
