2026ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 3ஆவது உயர் அதிகாரி கூட்டம் சீனாவின் டாலியன் நகரில் ஆகஸ்ட் 27 மற்றும் 28ஆம் நாட்களில் நடைபெற்றது. சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் மா சாவ்சியூ இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், சீனா இவ்வமைப்பின் நடப்பாண்டுக்கான தலைவர் நாடாக, ஆசிய-பசிபிக் பொது சமூகக் கட்டுமானத்தை மேலும் ஆழமாக்குவதை முன்னேற்றப் பாடுபடும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் போது, வர்த்தகம், போக்குவரத்து, தானியங்கள், சுங்கத்துறை, அறிவியல் தொழில் நுட்பம், எரியாற்றல், சுகாதாரம், சீற்றத் தடுப்பு, ஊழல் எதிர்ப்பு முதலிய துறைகளுடன் தொடர்புடைய சுமார் 130 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன.
