நேபாளத்தில் மண்சரிவு பாதிப்பு பற்றி நேபாள அரசுத் தலைவருக்கு ஆறுதல் தெரிவித்த ஷிச்சின்பிங்

சீன-நேபாள எல்லை கிர்லுங்-ரெசோவா நுழைவாயிலில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, பெரும் சேதம் மற்றும் உயிரிழப்பும் ஏற்பட்டது. பலர் காணாமல் போயினர். இதை அறிந்த, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் நேபாள அரசுத் தலைவர் பவுடலுக்கு ஆறுதல் கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில், காணாமல் போனவர்களை சீனா முழு மூச்சுடன் தேடி, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தி வருகிறது. மீட்புப் பணியில் நேபாளத்துக்குத் துணை புரிந்து, இயன்ற ஆதரவு மற்றும் உதவி அளிக்க சீனா விரும்புகிறது. இரு நாட்டு மக்கள் கையோடு கைகோர்த்து, இயர்கை சீற்றத்தில் இருந்து மீண்டு, தாயகத்தை மீண்டும் கட்டியமைப்பது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதே நாள், சீன தலைமையமைச்சர் லிச்சியாங் நேபாள தலைமையமைச்சர் பலேந்திரவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

You May Also Like

More From Author