மண்சரிவு பேரழிவு ஏற்பட்ட காரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது

Estimated read time 0 min read

நேபாள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் நாள் ஏற்பட்ட பனிசரிவு காரணத்தால் சிட்சாங் கிய்லோங் நுழைவாயில் பகுதியில் மண்சரிவு பேரழிவினால் பாதிக்கப்பட்டது குறித்து, சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேச அரசின் செய்தி அலுவலகம் ஆகஸ்ட் 30ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில், இந்தப் பேரழிவு ஏற்பட்ட காரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த பனிக்கோள அவசரநிலை மற்றும் பேரழிவு குறைப்பு குழுவின் ஆய்வாளர்கள், தொலை உணர்வு தரவுகள், பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் ஆகியவற்றை நேரடி கள ஆய்வுப் பயண முடிவுகளுடன் ஒருங்கிணைத்த பின் கிடைத்த தரவுகள் கூறும்படி, இந்தப் பேரழிவு ஏற்பட்ட காரணம் உறுதி செய்யப்பட்டது. பெய்ஜிங் நேரப்படி ஆகஸ்ட் 26ஆம் நாள் காலை சுமார் 10:52மணி அளவில் நேபாளத்தில் கடல் மட்டத்திலிருந்து 5200மீட்டர் உயரமான பனிப் பகுதி சரிவு ஏற்பட்டது. 4000 உயர் மீட்டர் உயரத்தில் மாபெரும் மண் சரிவு உருமாறியது. அதைத் தொடர்ந்து, 22கிலோமீட்டர் வேகத்துடன் கீழே பாய்ந்து சரிந்து, கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் உள்ள சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த கிய்லோங் நுழைவாயிலைச் சென்றடைந்தது. இதைவிளைவாக, இப்பகுதியில் சுமார் 0.7சதூர மீட்டர் நிலப்பரப்பில் உள்ள 27 கட்டிடங்களும் தொடர்புடைய வசதிகளும் இப்பேரழிவால் முற்றிலும் சீர்குலைந்தன என்று தெரிவிக்கப்பட்டது.

தவிரவும், ஆகஸ்ட் 29ஆம் நாள் பிற்பகல் 6:00 மணிக்கு வரை, சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிகசே நகரில் உள்ள கியிலோங் நுழைவாயில் பகுதியில் 16பேர் உயிரிழந்தனர், 546பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author