ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாதனைகள் பற்றிய பொது கருத்து கணிப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டு உச்சி மாநாட்டை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் தொலைக்காட்சி நிலையமும் சீன ரென்மின் பல்கலைக்கழகமும் கூட்டாக நடத்திய ஒரு பொது கருத்து கணிப்பில், உலகின் 48நாடுகளைச் சேர்ந்த 13707பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இக்கருத்து கணிப்பில் பங்கெடுத்தவர்கள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 25ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் உருவாக்கப்பட்ட நடைமுறைக்கு உகந்த ஒத்துழைப்பு சாதனைகள் குறித்து நேர்மறையான கருத்துக்கள் தெரிவித்தனர். வர்த்தக வசதிமயமாக்கல், முதலீடு மற்றும் நிதி ஒத்துழைப்பு, பண்பாட்டு பரிமாற்றங்கள் மற்றும் சுற்றுலா ஆகிய மூன்று முக்கிய துறைகளில் இந்த அமைப்பின் சர்வதேச செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர். இதில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளிகளைச் சேர்ந்த பதிலளிப்பாளர்களில் இருக்கும் 75.4விழுக்காட்டினர், “ஷாங்காய் எழுச்சி” என்பது பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், கலந்தாய்வு, நாகரிக பல்வகைமைக்கான மரியாதை மற்றும் கூட்டு வளர்ச்சியை நோக்கிய தேடல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட ஒரு ஒத்துழைப்பு வழியை வழங்குகிறது என்று கூறுகின்றனர். தவிர, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, உலகின் தெற்கு நாடுகளின் குரலை வலுப்படுத்தியுள்ளது என்றும், மேலும் நியாயமான உலகளாவிய ஆட்சிமுறை அமைப்புமுறையைக் கட்டியெழுப்புவதை முன்னெடுத்துள்ளது என்றும் பதிலளித்தவர்களில் 71.1விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author