இந்தியாவில் தயாராகும் அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை!

Estimated read time 0 min read

இந்தியாவின் முன்னணி பாதுகாப்புத் தொழில் நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட், அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஜாவெலின் எதிர்ப்பு பீரங்கி ஏவுகணைகளை இந்தியாவில் இணைந்து தயாரிப்பதற்காக முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஜாவெலின் ஏவுகணையைத் தயாரிக்கும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் ராய்ஸியான் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பான ஜாவெலின் ஜாயிண்ட் வென்ச்சர் உடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் ஏவுகணையின் இறுதி இணைப்புப் பணிகள் மற்றும் சில முக்கிய உதிரிபாகங்கள் உற்பத்தி இந்தியாவில் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author