8வது சீன-ரஷிய எரியாற்றல் வணிக மன்றக்கூட்டம் செப்டம்பர் 4ஆம் நாள் ரஷியாவின் விலாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இம்மன்றக்கூட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சிக்கலான மாற்றங்கள் நிறைந்த சர்வதேச சூழ்நிலையில், சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு உயர்நிலையில் வளர்ந்து வருகிறது. சீன-ரஷிய எரியாற்றல் ஒத்துழைப்பு செழுமையான சாதனைகளைப் பெற்று, இரு நாட்டுக் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புக்கான முன்மாதிரியாக விளங்கியுள்ளது என்றார்.
மேலும், தற்போது சர்வதேச எரியாற்றல் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வாய்ப்புகளும் சவால்களும் உள்ளன. இந்நிலையில், ரஷியாவுடன் இணைந்து, எரியாற்றல் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, எரியாற்றல் தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலியின் நிலைத்தன்மையைக் கூட்டாகப் பேணிக்காக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
