சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் துணைத் தலைமையமைச்சருமான டிங் சுயே சியாங், 3ஆம் நாள், ரஷியாவின் விலதிவோஸ்டோகில் நடைபெற்ற 11ஆவது கீழைப் பொருளாதாரக் கருத்தரங்கில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலின் கீழ், சீன-ரஷிய “வட கிழக்கு-தூரக் கிழக்கு” உள்ளிட்ட பகுதிகள் சார்ந்த ஒத்துழைப்பு சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார். மேலும், ரஷியாவுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களுக்கிடையில் எட்டப்பட்ட முக்கிய ஒத்தக் கருத்துக்களை பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தி, சீன-ரஷிய உறவுக்கான நிதானமான, சீரான வளர்ச்சிக்குரிய புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வர வேண்டும் என்று சீனத் தரப்பு விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
அதோடு, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை மேலும் விரிவாக்குவதில் சீனா ஊன்றி நின்று வருவதைச் சுட்டிக்காட்டிய அவர் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வதற்கு வரவேற்பு தெரிவித்தார்.
