சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுக் கூட்டம் ஆகஸ்ட் 29ம் நாள் நடைபெற்றது. இதில் “சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனை மற்றும் அரசியல் பணி விதிகள்” என்ற தலைப்பிலான ஆவணத்தைப் பரிசீலனை செய்து, சீன மக்கள் குடியரசின் தேசிய இன ஒற்றுமை முன்னேற்ற ஊக்குவிப்பு சட்ட வரைவு ஆய்வு செய்யப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
தேசிய சட்டமியற்றல் மூலம், தேசிய இனப் பணிகளில் கிடைத்த முக்கிய தத்துவம் மற்றும் நடைமுறை சாதனைகளை, தேசிய மனவுறுதியாக மாற்றுவது, சீன தேசத்தின் பொது சமூக அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, சீன தேசத்தின் ஒற்றுமை சக்தியை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை, இந்தச் சட்டத்தை வகுக்கும் நோக்கம் ஆகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.