சீன அரசுத்தலைவரும் அமெரிக்க அரசுத் தலைவரும் பெய்ஜிங்கில் எட்டியுள்ள பொதுக் கருத்துக்களை இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுக்கள் உணர்வுப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருவதாக சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாங்லீங் 10ஆம் நாள் செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
3000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சமநிலையிலான வரி குறைப்புக் கட்டுக்கோப்புக்குள் இரு தரப்புகள் கலந்தாலோசித்து வருவதாகவும், இது கூடிய விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
