முன்னேறி செல்கின்ற சீன மற்றும் ஆசியான்ஒத்துழைப்பும்

44 மற்றும் 45வது ஆசியான் உச்சி மாநாடுகள் அண்மையில் லாவோஸின் வியன்டியான் நகரில் நிறைவு அடைந்தது.

உச்சி மாநாட்டின்போது நடைபெற்ற 27ஆவது சீன-ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில், சீன மற்றும் ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் பதிப்பு 3.0 பற்றிய பேச்சுவார்த்தை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இரு தரப்பும் கூட்டாக அறிவித்தன.

கிழக்காசிய பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை புதுப்பிப்பதற்காக இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். உறுதியுடன் பலதரப்புவாதத்தையும் தாராள வர்த்தகத்தையும் ஆதரிப்பதில் இரு தரப்புகளின் மனவுறுதியை இதுவும் வெளிக்காட்டியது.

நடப்பு ஆசியான் உச்சி மாநாட்டிற்கு முன்பும் பின்பும், சில எதிர்மறை கருத்துக்கள் எழுந்ததை வெளியுலகம் கவனித்தது. எடுத்துக்காடாக, ஆசியாவில் நேட்டோவை நிறுவுதல் பற்றிய கருத்தை சில ஜப்பானிய அரசியல்வாதிகள் முன்வைத்தனர். அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் தென் சீனக் கடல் பிரச்சினையைப் பயன்படுத்தி, முரண்பாடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இவை, ஆசியான் பிரதேசத்தின் அமைதியான வளர்ச்சியைப் பேணிக்காக்கும் எதிர்பார்ப்புக்கு எதிரானது. இதனால், இவை பரந்த அளவில் விமர்சிக்கப்பட்டன மற்றும் எதிர்க்கப்பட்டன. ஆசியானுக்கு நேட்டோ தேவையில்லை என்று மலேசியா வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன் தெளிவாக தெரிவித்தார். உச்சிமாநாட்டை நடத்தும் நாடான லாவோஸின் அரசுத்தலைவர் தொங்லூன் சிசோலித் கூறுகையில், அமைதி, நிதானம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சி என்ற பொதுவான இலக்குகளை ஆசியான் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், சமத்துவம் மற்றும் பரஸ்வர நலன்கள் தரும் பலதரப்புவாதத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.நடப்பு ஆசியான் உச்சி மாநாட்டில் சாதனைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பத்துக்கும் மேலான ஆவணங்கள், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, விநியோக சங்கிலி ஒத்துழைப்பை முன்னேற்றுவது, செயற்கை நுண்ணறிவுத் தொழிலை வளர்ப்பது உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடையவை. அமைதியைத் தேடுவதும், வளர்ச்சியை மேம்படுத்துவதும் பிராந்திய நாடுகளுக்கு அவசர தேவைகளாகும். 

சிக்கலை உருவாக்கும் பேச்சுக்கள் மற்றும் செயல்கள் வரவேற்கத்தக்கவை அல்ல என்று நடப்பு உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஆவணங்களும் ஒத்த கருத்துக்களும் காட்டுகின்றன. தலையீட்டை நீக்கி, பொது நலன்களில் கவனம் செலுத்துதல், உரிய முறையில் கருத்து வேறுபாடுகளைக் கையாள்வது ஆகியவை, சீனாவுக்கும் ஆசியானுக்கும் இடையே ஒத்துழைப்பு மேற்கொள்வதன் மதிப்புமிக்க அனுப்பவம் ஆகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author