சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ அழைப்பை ஏற்று, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சாருடன் மார்ச் 3ஆம் நாள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.
தற்போதைய சூழ்நிலை பற்றிய இஸ்ரேலின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த பிறகு வாங்யீ கூறுகையில், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சீனா எப்போதுமே ஆதரவு அளித்து வருகிறது. பல்வேறு தரப்புகள் ஐ.நா. சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். சர்வதேச உறவில் வன்முறை மற்றும் இராணுவ ஆற்றலைப் பயன்படுத்தக்கூடாது. இது, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது என்றார்.
மேலும், மத்திய கிழக்கு பிரச்சினை குறித்து, சீனா எப்போதுமே நியாயமான நிலைப்பாட்டில் ஊன்றி நின்று வருகிறது என்றும், தற்போதைய பதற்றத்தைக் குறைக்க சீனா தொடர்ந்து பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
