செயற்கை நுண்ணறிவு குறித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து

சீன அரசுத் தலைவர் பயணத்தின் முடிவுகளை அறிமுகப்படுத்தும்போது, அமெரிக்கத் தரப்பு ‘செயற்கை நுண்ணறிவு’ என்பதற்குப் பதிலாக ‘சூப்ர் நுண்ணறிவு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் தங்களது சந்திப்பின் போது செயற்கை நுண்ணறிவு குறித்து ஆழமாக விவாதங்களை நடத்தினர். செயற்கை நுண்ணறிவு தொடர்பான சொற்களின் பயன்பாடு குறித்து, சீனா அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதோடு, அமெரிக்கத் தரப்பு பயன்படுத்த சொற்களையும் மதிக்கிறது என்றார். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. புதிய முன்னேற்றங்களின் அடிப்படையில் பல்வேறு தரப்புகள் கருத்துப் பரிமாற்றங்களை வலுப்படுத்தி, ஆழமாக விவாதங்களை நடத்தி, பொது கருத்துக்களை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author