சீனாவின் நிதித் துறைஅமைச்சகம் ஜுலை 29ம் நாள், 2025ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் அரசு வசமுள்ள தொழில் நிறுவனங்களின் பொருளாதாரச் செயல்பாட்டு நிலைமையை வெளியிட்டது. அதன்படி, ஜனவரி முதல் ஜூன் வரை, இந்த தொழில் நிறுவனங்களின் மொத்த வருமானம், 40இலட்சத்து 74ஆயிரத்து 959 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.2 விழுக்காடு குறைந்தது. இக்காலக்கட்டத்தில் இந்த அரசு தொழில் நிறுவனங்களின் மொத்த இலாபம், 2 இலட்சத்து 18ஆயிரத்து 253 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.1 விழுக்காடு குறைவு என்று தெரிய வந்துள்ளது.