16ஆவது சீனச் சர்வதேச விமான மற்றும் விண்வெளி பொருட்காட்சி டிசம்பரில் துவக்கம்

Estimated read time 0 min read

16ஆவது சீனச் சர்வதேச விமான மற்றும் விண்வெளி பொருட்காட்சி பற்றிய செய்தியாளர் கூட்டம் அக்டோபர் 13ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இப்பொருட்காட்சியின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் சிறப்புகள் இதில் அறிமுகம் செய்யப்பட்டன. 16ஆவது சீனச் சர்வதேச விமான மற்றும் விண்வெளி பொருட்காட்சி டிசம்பர் 7ஆம் முதல் 13ஆம் நாள் வரை, சீனாவின் குவாங்தோங் மாநிலத்தின் சூஹய் நகரில் நடைபெற உள்ளது. தற்போது வரை, சுமார் 50 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 1100க்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கத் திட்டமிட்டுள்ளன. 3000க்கும் மேற்பட்ட சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்படும். இவற்றில் சுமார் 10 விழுக்காட்டுச் சாதனங்கள் முதல்முறையாக காட்சிக்கு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author