”அதானி பவர் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் ₹7,019 கோடி” பங்குச்சந்தையை அதிர வைத்த மாபெரும் வளர்ச்சி நிலவரம்….!! 

அதானி பவர் (Adani Power) நிறுவனத்தின் 2026-27 நிதியாண்டின் 2-வது காலாண்டு நிகர லாபம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 142% அதிகரித்து ₹7,019 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. “இவ்வளவு லாபம் வந்துருக்கே, எங்களோட கரண்ட் பில் கட்டணத்தையும் கொஞ்சம் குறைச்சா என்ன குறைஞ்சா போயிடும்” என்று பொதுமக்கள் தங்களின் ஆதங்கங்களை எதார்த்தமாகப் பேசி வரும் நிலையில், நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இந்த மாபெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகப் பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதானி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் (EBITDA) 46% உயர்ந்து ₹8,743 கோடியாகவும், ஒட்டுமொத்த வருவாய் 39% அதிகரித்து ₹19,951 கோடியாகவும் பதிவாகியுள்ளது. மின் உற்பத்தியை அதிகரித்துச் சந்தையின் தேவையைச் சரியான நேரத்தில் பூர்த்தி செய்ததன் மூலமே இந்த அபார லாபத்தை எட்ட முடிந்ததாக அந்நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் வலுவான செயல்பாடுகளால் மின்சாரத் துறையில் அதானி பவர் நிறுவனம் அடைந்துள்ள இந்த ராட்சத வளர்ச்சி, பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் மீதான எதிர்பார்ப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

You May Also Like

More From Author