இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
இதுவரை இந்தியாவில் 1952, 1963, 1973 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை இந்த ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1960களின் இறுதியில் நடந்த மறுவரையறை ஒரு மிகமுக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
அதுவரை தமிழ்நாட்டின் அரசியல் பலம் நாடாளுமன்றத்தில் அதிகமாக இருந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டபோது ஒரு பின்னடைவு ஏற்பட்டது.
தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி?
