சீனாவின் ஸ்மார்ட் சிட்டி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பெய்ஜிங்கில் நியமிக்கப்பட்ட சாலைகளில் தன்னியக்க ரோபோடாக்சிகள் வணிகச் செயல்பாட்டை நோக்கி முன்னேறி வருகின்றன.
அப்பல்லோ கோ என்னும் தானியக்க-பகிர்வு சேவை 2017ஆம் ஆண்டு பெய்ஜிங்கின் யீஜாங் பகுதியில் தொடங்கப்பட்டது.
இந்த ரோபோடாக்சியானது சரிவுப்பாதைகளில் செல்லவும், யு-டர்ன் செய்யவும்,மற்ற கார்களை முந்திச் செல்ல பாதைகளை மாற்றவும் மற்றும் அவசரகாலத்தில் உதவிக்கு அழைக்க ஒரு பொத்தானையும் கொண்டுள்ளது.
பெய்ஜிங் டாஷிங் சர்வதேச விமான நிலையத்தில், அப்பல்லோ கோ உட்பட பல ரோபோடாக்சிகள், ஓட்டுநர் இல்லாத தானியக்க வாகனச் சேவைகளை வழங்க பெய்ஜிங் அனுமதி அளித்துள்ளது.
தற்போது வரை சாலைகளில் 10 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமான உயர்-நிலை தானியக்க பாதுகாப்பு சோதனையை நிறைவேற்றியுள்ளது.
மற்றும் 5,000 தன்னாட்சி ஓட்டுநர் காப்புரிமையைப் பெற்றுள்ளது.இந்த காப்புரிமை உயர்நிலை தன்னாட்சி ஓட்டுநர் காப்புரிமையின் எண்ணிக்கையில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது என்று பைய்டூ அப்பல்லோ நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு மேலாளர் லியுச்சுச்சு கூறினார்.
2020ஆம் ஆண்டில், சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், நகர்ப்புற நிர்வாகத்தை நவீனமயமாக்க பெருந்தரவுகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு பெரிய நகரங்ககளை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.