உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் வட மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி பெளர்ணமி பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அனுமனின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த புனித நாள் கொண்டாடப்படுகிறது.
வலிமையின் கடவுளாக போற்றப்படும் அனுமன் அனைத்து தீய சக்திகளிலிருந்தும் நம்மை காப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.