அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தியென்ஹூவா உள்ளிட்ட 8 மூத்த கலைஞர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி திரைப்படப் பணியாளர்கள் மீதான தங்களது எதிர்பார்ப்பைத் தெரிவித்தார்.
கடிதத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில், நீண்டகாலத்தில் நீங்கள் நிறைய உயிர்த்துடிப்புடனான திரைப்பட பாத்திரங்களைப் படைத்து தலைமுறை தலைமுறையான பார்வையாளர்களுக்கு அருமையான நினைவுகளை வழங்கியுள்ளனர். புதிய பாதையில், நீங்கள் பெரும்பாலான திரைப்படப் பணியாளர்களை வழிநடத்தி பண்பாட்டு நம்பிக்கையில் ஊன்றி நின்று புதிய யுகத்தின் எழுச்சியையும் மக்களின் உணர்வையும் வெளிக்காட்டும் சிறந்த படைப்புகளைப் படைக்க வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்தார்.