மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாவோயிஸ்ட் குழுக்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் வாரியத்தின் தேசிய தலைமையகத்தைத் திறந்து வைத்த பிறகு, தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் நடந்த பேரணியில் பேசிய அமித்ஷா, ஆயுதம் ஏந்தியிருப்பவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்று கூறினார்.
மேலும், மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, பிரதான ஜனநாயக வாழ்க்கையில் இணைய வேண்டும் அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தினார்.
மார்ச் 31, 2026க்குள் மாவோயிஸ்ட் குழுக்களை முற்றிலுமாக ஒழிக்க அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறை தவறானது மற்றும் பலவீனமானது என்று கூறினார்.
மாவோயிஸ்ட்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப அமித்ஷா அறிவுரை
