“2026 உலக மாநகராட்சித் தலைவர்கள் உரையாடல்-நிங்போ”எனும் நிகழ்வு, நவம்பர் 2 முதல் 5ஆம் நாள் வரை, சீனாவின் ச்சே ஜியாங் மாநிலத்தின் நிங்போ நகரில் நடைபெற்றது. இதில் 15 நாடுகளின் 20 நகரங்களின் மாநகராட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, “திறந்த ஒருங்கிணைப்பு·சகவாழ்வில் வாய்ப்புகள்”என்ற தலைப்பு குறித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்வில், நிங்போ ச்சோ ஷன் துறைமுகம், நுண்ணறிவு தயாரிப்புத் தொழில் நிறுவனம், துறைமுக நகரின் ஒத்துழைப்பு, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் முதலிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. 14 பணித்திட்டங்களின் ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிடப்பட்டன. ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிங்போ உடன்பாடு வெளியிடப்பட்டதோடு, நாகரிகப் பரிமாற்றத்தை முன்னெடுக்கும் புத்தகக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நிங்போ நகரில் நடைபெற்ற உலக மாநகராட்சித் தலைவர்கள் உரையாடல்
You May Also Like
More From Author
ஆக.17 முதல் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம்
August 4, 2025
அல்லு அர்ஜுன் -லோகேஷ் கனகராஜ் இணையும் #AA23: வைரலாகும் புதிய செல்பி
February 18, 2026
CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
May 13, 2025
