சீன ஊடகக் குழுமம் நடத்திய வசந்த காலத்தின் சீனா: உலகத்துடன் சீன வாய்ப்புகள் பகிர்வு எனும் உலகளாவிய உரையாடல் மார்ச் 14ஆம் நாள் கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியுன் இதில் காணொலி வழியாக உரைநிகழ்த்தினார்.
கொலம்பியாவுக்கான சீனத் தூதர் ட்சூ ஜின்யாங், கொலம்பிய வணிகம் மற்றும் தொழில் துறையின் தற்காலிக அமைச்சர் சிரோ ருசிங்க் உள்ளிட்ட இரு நாட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 150 விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சீனாவின் உயர் தர வளர்ச்சி உலகத்துக்கு குறிப்பாக பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு மேலதிக புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வருவது குறித்து விவாதம் நடத்தினர்.