மக்கள் தொகை மூப்படைதல் தொடர்பான பணிக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் முக்கிய உத்தரவு வழங்கினார். இதில், கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு நாட்டின் மக்கள் தொகை மூப்படைதல் தொடர்பான பணிகளில் புதிய முன்னேற்றங்களும் புதிய பயன்களும் பெறப்பட்டுள்ளன. முதுமைக்காலப் பராமரிப்பு துறை மற்றும் அது தொடர்பான தொழில்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், முதியோர்களின் மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.
புதிய பயணத்தில், புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையை வழிகாட்டலாகக் கொண்டு, மக்கள் தொகை மூப்படைதல் பிரச்சினையைச் சமாளிக்கும் தேசிய உத்திநோக்கு திட்டத்தை ஆழமாக செயல்படுத்தி, முதியோருக்கான சமூக காப்புறுதி, முதுமைக்காலப் பராமரிப்பு சேவை, உடல்நல சேவை, சமூக பங்களிப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தி, முதியோருக்கு மேலும் மகிழ்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வழங்க பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
