தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (குரூப் 4) மூலம் நேரடி நியமனத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்களுக்கு, விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.
தேர்வர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களைக் கணினி வழித் திரைச் சரிபார்ப்புக்கு உட்படுத்தியபோது, சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களைக் குறைபாடுடனோ அல்லது தவறாகவோ பதிவேற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக, வருகிற நவம்பர் 23 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு; நவம்பர் 23க்குள் இதை பண்ணிடுங்க
