ஃபீல்ட்ஸ் விருது பெற்ற, சீன அறிவியல் கழகத்தின் வெளிநாட்டு மூத்த அறிஞர் அன்ட்ரேய் ஒகுன்கோவ் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், சீனா ஏற்பாடு செய்த சர்வதேச அடிப்படை அறிவியல் மாநாடு, முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதன் மூலம் சீனாவுக்கும் சர்வதேச சமூகத்துக்குமிடையிலான தூரம் குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் நேருக்கு நேர் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்கின்றனர். சீன அரசு, கல்வி மீது ஆர்வம் காட்டும் சமூகத்தைக் கட்டியமைப்பதில் தலைமை தாங்குகிறது. அறிவியல் புத்தாக்கம், கணிதவியல் முதலிய அடிப்படை அறிவியலின் வளர்ச்சிக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது. நவீன சமூகத்தின் செழுமையின் வேர், அறிவியலுடன் தொடர்புடையது. இதற்கு முக்கியத்துவம் அளித்த சீன அரசுக்கு மதிப்பு அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.