டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக அமலாக்க இயக்குனரகம் (ED) உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) பிரச்சாரத்திற்காக சட்டவிரோத நிதியை நிர்வகித்த சன்பிரீத் சிங், இந்த செலவுகளுக்கு பணம் கொடுத்ததாக ED குற்றம் சாட்டியுள்ளது.
மக்களவை தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது.
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிராக வாதாடி வரும் அமலாக்க இயக்குனரகம், இந்த தகவலை தெரிவித்துள்ளது.
டெல்லி மதுக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.