மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்தது குன்னூர் வழியாக உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, ஹில்கிரோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனை அப்புறப்படுதும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால் இன்று ஒரு நாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.