பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps – FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை (நவம்பர் 24) காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
திங்கட்கிழமை அதிகாலை வேளையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதலை தொடங்கியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறியது.
பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
