சீனாவின் தியென் ஜின் மாநகரில் 31ஆம் நாள் முதல் செப்டம்பர் முதல் நாள் வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கெடுக்கும் வகையில், இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 30ஆம் நாள் மாலை தியென் ஜின்னின் பின் ஹாய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவ்வாண்டு சீனா இந்தியா இடையே தூதாண்மை நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவாகும். இது குறித்து இந்திய தரப்பு கூறுகையில், இதை வாய்ப்பாக கொண்டு, சீனாவுடனான அரசியல் பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கவும், பொருளாதாரம், வர்த்தகம் முதலிய துறைகளில் பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், மானுட பரிமாற்றத்தை அதிகரிக்கவும், எல்லை பகுதியின் அமைதியை கூட்டாக பேணிக்காக்கவும் விரும்புவதாக தெரிவித்தது.