காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஹெஸ்பொல்லா பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ், ஆச்சரியங்களுக்கு தயாராக இருக்குமாறு இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
“எங்கள் தரப்பில் இருந்து நீங்கள் ஆச்சரியங்களை எதிர்பார்த்திருங்கள்” என்று அவர் வெள்ளிக்கிழமை கூறினார்.
லெபனான் உள்நாட்டுப் போரின் போது பலமான சக்தியாக உருவெடுத்த ஹெஸ்பொல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கும் காசாவிற்கும் ஆதரவாக இஸ்ரேலுடன் போரிட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேஸ் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் குழு தாக்குதல்நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றது.