டெல்லி : பிரதமர் மோடி சொன்ன ‘தீபாவளி பரிசுக்காக’ பலரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில், இன்றும் நாளையும் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 5%, 18% என 2 அடுக்குகளாக கொண்டுவருவது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சர்க்கரை உள்ளிட்ட பலசரக்கு முதல் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் கார், சிகரெட் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்தில், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) தொடர்பான முக்கிய முடிவுகள், விகித மாற்றங்கள், வரி விலக்குகள் மற்றும் நிர்வாக மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்படலாம். மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்பார்கள்.
கூட்டத்தின் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் பற்றிய விவரங்கள் பொதுவாக முன்கூட்டியே அறிவிக்கப்படுவதில்லை. ஜிஎஸ்டி விகிதங்களை 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டாகக் குறைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.