சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 15ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் அல்பனீஸைச் சந்தித்து பேசினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன் சீன-ஆஸ்திரேலிய உறவு இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயத்துள்ளது என்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
அல்பனீஸ் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், ஆஸ்திரேலிய-சீன உறவு ஆக்கப்பூர்வ முன்னேற்றம் அடைந்து வருகிறது. சீனாவுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புவதாக தெரிவித்தார். மேலும், சீனாவின் வளர்ச்சி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுடன் இணைந்து பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, ஐ.நா முக்கிய பங்காற்றுவதை ஆதரிக்க ஆஸ்திரேலியா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.